Friday, March 6, 2009

தினம் ஒரு குர்ஆன் வசனமும் அதன் விளக்கமும் : 3

அத்தியாயம் : சூரத்துல் பகரா
வசானம் : 2,3
  1. இது வேதம் இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு (இது) வழி காட்டி.
  2. அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள்.


ஐந்து புலன்களுக்கும் எட்டாதவை யாவும் மறைவானவை என்பதில் அடங்கும்.
ஆயினும் இஸ்லாமிய நம்பிக்கைப் படி மறைவானவற்றை நம்புவது என்ற சொல் தொடர் குறிப்பிட்ட சில விஷியங்களை நம்புவதைக் குறிக்கும்.

அல்லாஹ் வானவர்கள், சொர்க்கம் அதில் கிடைக்கும் இன்பங்கள். நரகம் அதில் அமைக்கப்பட்ட பல்வேறு தண்டனைகள். நியாயத் தீர்ப்பு நாளில், அந்நாளில் ஏற்படும் அமளிகள் போன்றவற்றை கண்ணால் காணமல் இருந்தும் நம்புவது தான் மறைவானவற்றை நம்புதல் என திருகுர்ஆன் (2:3) கூறப்பட்டுள்ளது

1 comment: