Monday, March 9, 2009

தினம் ஒரு கேள்வி 9

Date : 9/03/2009
கேள்வி எண்: 9

குர்ஆனில் மூன்றில் ஒரு பங்கிற்கு நிகரான அத்தியாயம் என்று நபிகள் நாயகம் (ஸல்) எந்த சூராவை குறிப்பிட்டார்கள் ?

பதில்: சூரத்துல் இக்லாஸ் 112 வது அத்தியாயம்

ஆதாரம் : புகாரி 5013

அபூ சயீத் அல் குத்ரீ (ரலி) அறிவதார்கள்
ஒருவர் "குல்ஹூவல்லஹூ அஹத்" எனும் (112 வது ) அத்தியாயத்தை திரும்ப திரும்ப ஓதிக்கொண்டு இருந்ததை மற்றொரு மனிதர் செவிமடுத்தார்.

(இதை கேட்ட ) அந்த மனிதர் விடிந்ததும் இறைதூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அதை பற்றி கூறினார். அந்த சிறிய அத்தியாயத்தை (க் திரும்ப திரும்ப அவர் ஓதியதை ) இவர் சாதாரணமாக மதிபிட்டத்தை போல் தெரிந்தது. அப்போது இறைதூதர் (ஸல்) அவர்கள் " என் உயிர் எவன் கைலயில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக!! அந்த அத்தியாயமும் குர்ஆனின் மூன்றில் ஒரு பங்கிற்கு ஈடானதாகும்" என்று கூறினார்கள்.

No comments:

Post a Comment