Sunday, March 8, 2009

காலத்தால் முரண்படாதது : திருகுர்ஆன்

  • நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கி.பி. 570-ல் பிறந்தார்கள்.
இந்தக் கால கட்டத்தில் உலக மக்கள் அறிவில் மிகவும் பின்தங்கிய நிலையில் இறந்தார்கள். உலகம் ஊருண்டை என்ற சாதாரண அறிவு கூட அன்றைய மக்களுக்கு இருக்கவில்லை.

இத்தகைய காலத்தில் வாழ்ந்தவர் எவ்வளவு தான் பெரிய மேதையாக இருந்தாலும் அவரது காலத்தது அறிவைக் கடந்து எதையும் கோரவாஎ இயலாது. சுமார் நூறு வருடம் கடந்த பின் அவரது நூலை வாசித்தால் அதில் பல தவறுகள் இருப்பதை உலகம் கண்டு கொள்ளும்.

நூறு வருடங்களுக்கு பின் என்ன நடக்கும், என்னென்ன கண்டு பிடிக்கப்படும் என்ற விபரங்களை நூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்தவரால் ஊகம் செய்ய இயலாது என்பதே இதற்கு காரணம்.

பல அறிஞ்சர்கள் கூட்டாகாச் சேர்ந்து உருவாக்கிய நூலக இருந்தால் கூட நூறு வருடங்கள் கழித்து பார்க்கும் பொது அதில் பல தவறுகள் இருப்பதை காண முடியும். அந்த நூலே காலத்திற்கு ஒவ்வாத நூலாகி விடும்.


ஆனால் எழுதவும் படிக்கவும் தெரியாத மிகவும் பின்தங்கிய சமுதாயத்தில் வாழ்ந்த ஒருவர் எதை இறை வேதம் என்று அறிமுகம் செய்தாரோ அந்த வேதத்தில் எந்த ஒன்றையும் தவறானது என்று இன்றைக்கும் நிரூபிக்க முடியவில்லை.

  • Bulleted Listதிருகுர்ஆனை பொருத்த வரை அது ஆன்மீகத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை. எல்லாத் துறைகளை பற்றியும் ஆங்காங்கே பேசுகிறது.
பூமி மற்றும் ஏனைய கோள்களின் அமைப்பு வானில் இருக்கின்ற அதிசயங்கள், புவியியல் மற்றும் வானியல் குறித்துப் பேசும் பொது. இந்த நூற்றாண்டின் மாமேதையும் வானியல் நிபுணரும் பேசினால் எவ்வாறு இருக்குமோ அதை விடச் சிறப்பாக திருகுர்ஆன் பேசுகிறது.

  • அது போல் மனிதன் மற்றும் உயரினங்கள், அவற்றின் உள் அமைப்புகள், உயிரினங்கள் உற்பத்தியாகும் விதம் எனப் பல விஷயங்களைக் குர்ஆன் பேசுகிறது. 14 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் மேதை பேசுவிதை விட அழகாக பேசுகிறது.
தாவரங்களைப் பற்றி பேசினாலும் மலைகளைப் பற்றி பேசினாலும் நதிகளை பற்றி பேசினாலும் 14 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் பேசியது போல் திருகுர்ஆன் இல்லை

  • அது மற்றுமின்றி சென்ற நூற்றாண்டுக்கு முன்னால் வரை காண்டுபிடிக்கபடாத தர்போதி கண்டு பிடிக்கப்பட்ட பல விஷயங்களை குர்ஆன் அன்றே சொல்லியிருக்கிறது

  • இன்று வாழும் பல்வேறு துறைகளிலும் தேர்ந்த அறிவுடைய ஒருவர் பேசுவதை விடச் சிறப்பாக திருக்குர்ஆன் பேசுவதையும். நபிகள் நாயகத்தின் களச் சூழ்நிலைகளையும் ஒரு சேர சிந்திக்கும் யாரும் "இத் முஹம்மத் நபியின் சொந்த வார்த்தையாக இருக்க முடியாது. முக்காலமும் உணர்ந்த இறைவனின் வார்த்தையாக தான் இருக்க முடியும் " என்ற முடிவுக்கு வந்தாக வேண்டும்.
  • அறிவியல் நவீன கண்டு பிடிப்புகள் மட்டுமின்றி குர்ஆன் கூறுகின்ற அரசியல் சட்டங்கள், குற்றவியல் மற்றும் சிவில் சட்டங்களை ஒருவர் ஆய்வு செய்தால் இன்று உலகமெங்கும் உள்ள எல்லாச் சட்டங்களை விடவும் அது சிறந்து விளங்குவதையும் மனித குலத்துக்கு அதிகப் பயன் தரக்கூடிய வகையில் அமைந்திருப்பதையும் அறிந்து கொள்வார். முஸ்லிமல்லாதவர்கள் கூட குர்ஆன் கூறும் சட்டங்களை அமுல்படுத்த கோரும் அளவுக்கு குர்ஆன் கூறும் சட்டங்கள் அமைந்துள்ளன.

  • ஏரளாமான சட்டங்களையும் மரபுகளையும் முன் அனுபவங்களையும் ஆய்வு செய்து பல்வேறு சட்ட மேதைகள் உருவாகிய சட்டங்களே ஆண்டு தோறும் திருத்தப்பட்டு வரும் நிலையில் இறை சட்டங்கள் என முஹம்மத் நபி அவர்கள் அறிமுகப்படுத்திய சட்டங்கள் பலராலும் வரவேற்கப்படுவது முஹம்மத் நபியின் சொந்த கூற்றாக குர் ஆன் இருக்க முடியாது என்பதற்கு மற்றொரு சான்றாக உள்ளது

  • அது போல் உலகம் சந்திக்கின்ற தீர்க்க முடயாத பல பிரச்சனைகளுக்கு ஏற்கத் தக்க அற்புதமான தீர்வுகளைக் குர் ஆன் கூறுவதும் இது முஹம்மது நபியின் சொந்த கூற்று இல்லை என்பதற்க்கான ஆதாரமாக உள்ளது
குலம், கோத்திரம், சாதி இவற்றால் ஏற்படும் தீண்டாமை உலகில் பல நாடுகல்லில் பல நூறு ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத பிரச்சனையாக உள்ளது இந்த சிக்கலான பிரச்சனைக்கும் திருக்குர்ஆன் மிக எளிதான தீர்வை வழங்கி அடியோடு ஒழுத்து கட்டியதை உதாரணமாக கூறலாம்.

எதிர் காலத்தில் நடக்கவுள்ள பல சேதிகளைக் குர்ஆன் கூறுகிறது. அது கூறியவாறு அவற்றுள் பல நிகழ்வுகள் நடந்து முடிந்துள்ளன. வார்த்தைக்கு வார்த்தை நிறைவேற்றிய இத்தகைய முன்னறிவப்புகள் ஏராளம்.

முஹம்மத் நபியின் சொந்த கூற்றாக குர்ஆன் இருக்கவே முடியாது என்பதற்கு இவை யாவும் ஆதாரங்களாக உள்ளன.

எழுத படிக்க தெரியாத ஒருவர் இதைக் கற்பனை செய்தார் என்று நீங்கள் கூறுவது உண்மையென்றால் இது போன்று ஒரு அத்தியாயத்தையாவது கொண்டு வந்து காட்டுங்கள் என்று குர்ஆன் அறை கூவல் விடுகிறது.

அத்தியாயம் : பகரா வசனம் : 23,24
  • நமது அடியாருக்கு (முஹம்மத்) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள் !! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்து கொள்ளுங்கள்!!

  • உங்களால் (இதைச்) செய்யவே முடியாது. நீங்கள் செய்யாவிட்டால் (நரக) நெருப்புக்கு அஞ்சுங்கள்!! (கெட்ட) மனிதர்களும் கற்களுமே அதன் எரி (ஏக இறைவனை ) மருப்போருக்கொருக்காகவே அது தயாரிக்கப்பட்டுள்ளது
இந்த அறைகூவல் 14 நூற்றாண்டுகளாக யாராலும் எதிர் கொள்ளப்படவில்லை யாராலும் எதிர் கொள்ளப்பட முடியாது எனவும் குர்ஆண் முன்கூட்டியே திட்டவட்டமாக அறிவிக்கிறது

முஹம்மது நபியவரகள் இறை வேதம் என்று அறிமுகப்படித்திய குர் ஆணை விடப் பல மடங்கு அதிகமாக பேசியுள்ளார்கள். இறை தூதர் என்று தம்மை அறிவித்த பின் அவர்கள் வாழ்ந்த 23 வருடங்களில் பேசிய பேச்சுக்கள் பாதுகாகப்பட்டுள்ளன.

அந்த பேச்சுக்களையும் குர்ஆணையும் எந்த மொழியில் அறிஞர் ஆய்வு செய்தாலும் இரண்டும் ஒரே நபரின் கூற்றாக இருக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறுவார். இரண்டுக்கும் இடையே இலக்கிய சுவைகளிலும் நடையிலும் பெரிய வேறுப்பாட்டை காண்பார்.

முஹம்மத் நபியின் வழக்கமாக பேச்சுக்கு மாற்றமாகவும். அதை விடப் பன்மடங்கு உயர்ந்தும் நிற்கின்ற அதன் அழகே இறை வேதம் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை கூறிஇருக்க முடியாது என்று ஒப்புக் கொள்ளும் ஆய்வாளர்கள். யூத கிருஸ்தவ சமுதாய மக்களின் வேதங்களில்ருந்தும் கற்று இவர் கூறுகிறார் எனக் கூறியதுண்டு. இன்றைக்கும் கூட சில கிருஸ்தவ நண்பர்கள் இவ்வாறு கூறுவதுண்டு

ஏனெனில் நபிகள் நாயகத்துக்கு முன் வாழ்ந்த ஆதம் நோஎவா. மோசே. யோவான். யோபு தாவீது சாலமோன் இயேசு போன்ற பல்வேறு தூதர்கள் பற்றி பேசுவதால் முஹம்மது நபி அவர்கள் முந்தைய வேதங்களில் வழியாக அறிந்து அதை கூறிகிறார் என் கூறுகின்றனர்

பல காரணங்களால் இது தவறாகும்.

மேற்கண்ட நன்மக்களின் பெயர்களை தான் குர்ஆண் கூறுகிறதே தவிர யூத கிருஸ்தவ வேதங்கள் கூறுவது போல் அவர்களை பற்றி கூறவில்லை.

மேற்கண்ட நன்மக்கள் குடி விபச்சாரம் மோசடி போன்ற தீய பழக்க வழக்கங்கள் உடையோராக இருந்தனர் என்று மற்ற வேதங்கள் கூறுவது போல குர்ஆண் கூறவில்லை. மாறாக அவர்கள் நன்மக்களாக திகழ்ந்தார்கள் என்று கூறுகிறது.

அவர்கள் வாழ்வில் நாம் படிப்பினை பெற தேவையான முக்கிய நிகழ்ச்சிகளை மட்டுமே குர்ஆண் கூறுகிறது. அதுவும் மற்ற வேதங்கள் கூறுவதற்கு எதிராக கூறுகிறது.

"இவர் அவரை பெற்றார் : அவர் இவரை பெற்றார் " என்று யூத கிருஸ்தவ வேதங்களில் உள்ளது போல தலைமுறை பட்டியல் ஏதும் குர்ஆனில் இல்லை.

இவ்வாருக்க முந்தைய வேதங்களை முஹம்மத் நபி அவர்கள் பின்பற்றி விட்டார்கள் எனக் கருத முடியாது.

யூத கிருஸ்தவ வேதங்களில் மிக பெருமளவுக்கு வரலாறுகளும் மிகச் சிறிய அளவுக்கு சில போதனைகளுமே உள்ளன. வாழ்வின் அனைத்து பிரட்சனைகளுக்கும் அந்த வேதங்களில் எவ்வித வழிகாட்டுதலும் காணபடவில்லை. ஆனால் , திருகுர்ஆண் மனிதர்கள் படிப்பினை பெறத் தேவையான சில வரலாற்று துணுக்குகளை மட்டுமே குறிப்பிடுகிறது மேலும் மனிதன் சிந்திக்கின்ற அனைத்து பிரத்சனைகளிலும் ஏற்க தக்க தீர்வையும் கூறிகிறது இவை யூத கிருஸ்தவ வேதங்களில் கூறப்படாதவை எனவே அவ்வேதங்களிலிருந்து திருகுர்ஆண் காப்பியடிக்க பட்டது என்று கூறுவது அடிப்படையற்றது ஆகும்.

மற்ற சமுதாய மக்களை போலவே யூத க்ருச்தக்வ மக்களும் நபிகள் நாயகம் காலத்தில் அதிக அளவில் நபிகள் நாயகத்தை இறை தூதர் ஆக ஏற்றனர். தங்கள் வேதங்களில் உள்ளதை காப்பியடித்து கூறும் ஒருவரை தங்கள் வழி காட்டியாக அம்மக்க்காகல் ஏற்றிருக்க மாட்டார்கள் என்பதும் கவனத்தில் கொள்ள தக்கது.

எனவே முற்றிலும் இது இறைவன் புறந்திலிருந்து நபிபால் நாயகத்துக்கு அருளப்பட்ட செய்தி தான் என்பதும் முஹம்மத் நபி தாமாக ஒரிவாக்கி கொள்ளவில்லை என்பதும் எவ்வித சந்தேகத்திறக்கும் அப்பாற்பட்டது.


No comments:

Post a Comment