Tuesday, March 3, 2009

முரண்பாடு இல்லாத ஒரே வேதம் : குர்ஆண்

முஹம்மத் நபி அவர்கள் சுயமாக கற்பனை செய்து. அதை இறை வசனம் என மக்களிடம் கூறிஇருக்கலம் என்று சிலர் நினைக்க கூடும்.

நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள் தாமாக ஒருவாக்கி இதை கூறி இருக்க முடியாது என்பதற்கு ஏற்கத்தக்க நியாயமான பல காரணங்கள் உள்ளன.

பொதுவாக மனித பேச்சுகளில் முரண்பாடுகள் காணப்படும். ஒரு நாள் , இரண்டு நாட்கள் வேண்டுமானால் முரண்பாடு ஏற்படாத வகையில் மிகவும் கவனமாக பேசிட இயலும். எவ்வித முரண்பாடு இன்றி எவராலும் ஆண்டு கணக்கில் பேசிட இயலாது.

எந்த மாபெரும் அறிஞ்சரின் ஐந்து வருடப் பேச்சுகளை ஆய்வு செய்தாலும் ஏராளமான விசையங்களில் அவர் முரண்பட்டு பேசி இருப்பார் என்பதை காண மூடியும்.
  • முன்னர் பேசியதை மறந்து விடுதல்
  • முன்னர் தவறாக விளங்கியதை பின்னர் விளங்குதல்!!
  • கவலை,துன்பம் போன்ற பாதிப்புகள் காரணமாக கவனமின்றி பேசுதல்!
  • யாரிடம் பேசுகிறோமோ அவர்கள் மனம் கூடாது என்பதற்காக அல்லது அவர்களிடமிருந்து ஆதாயம் பெறுவதற்கு வளைந்து கொடுத்து பேசுதல்!
  • வயது ஏற ஏற மூளையின் திறனின் ஏற்படும் குறைபாடுகள்!!
  • விளைவுகளுக்கும் நெருகடிகளுக்கும் அஞ்சி இரட்டை நிலை மேற்கொள்ளுதல் !
மற்றும் இது போன்ற ஏராளமான பலவீனங்கள் மனிதனுக்கு முரண்பாடுகள் இல்லாத ஒரே ஒருவரை கூட காண முடியாது.

ஆனால், திருகுர்ஆனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறிது சிறிதாக 23 ஆண்டுகளாக மக்களிடம் போதிதார்கல். இது அவர்களின் சொந்த கற்பனையாக இருந்தால். 23 வருட பேச்சுகளில் ஏராளமான முரண்பாடுகள் அவர்களிடம் ஏற்பட்டிருக்கும். ஆனால் திருகுர்ஆனில் முரண்பாடுகள் எள்ளளவும் இல்லை.

மேலே சுட்டி காட்டிய பலவீனங்கள் எதுவமே இல்லாத ஏக இறைவனின் வார்த்தையாக திருகுர்ஆண் இருந்தால் மட்டுமே முரண்பாடு இல்லாமல் இருக்க மூடியும்.

இறைவனிடமிருந்து வந்தால் தான் தன்னுள் முரண்பாடு இல்லை என்று மனித குலத்துக்கு திருகுர்ஆண் அறைகூவல் விடுக்கிறது.

அத்தியாயம் 4 : வசனம் 82

"""அவர்கள் இந்த குர்ஆணை சிந்திக்க மாட்டார்களா ? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளை
கண்டிருப்பார்கள்!!"""

No comments:

Post a Comment