Wednesday, March 4, 2009

தினம் ஒரு கேள்வி 1

Date: 4/03/2009
கேள்வி எண் : 1

ஒருவன் பணத்தை கண்டெடுத்தால் எத்தனை நாட்கள் அதை அறிவிப்பு செய்ய வேண்டும் ?

பதில் : ஓராண்டு காலம்

ஆதாரம்: புகாரி 2426

உபை இப்னு அப் (ரலி ) அறிவித்தார் :
நான் ஒரு பணப்பையை கண்டெடுத்தேன். அதில் நூறு தினார்கள் இருந்தன. (அதை எடுத்து கொண்டு ) நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்கள் "ஓராண்டு காலம் அதை பற்றி நீ (பொது ) அறிவிப்பு கொடு" என்று கூறினார்கள். நானும் அதை பற்றி அறிவிப்புக் கொடுத்தேன். அதை அடையாளமும் புரிந்து கொள்பவர் எவரையும் நான் காணவில்லை. பிறகு மீண்டும் நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போதும் "ஓராண்டு காலம் அதை பற்றி அறிவிப்பு கொடு" என்று கூறினார்கள். நானும் அதை பற்றி அறிவுப்பு கொடுத்தேன். அதை அடையாளமும் புரிந்து (பெற்று) கொள்பவர் எவரையும் நான் காணவில்லை. பிறகு, மூன்றாவது முறையாக நபி (ஸல்) அவர்கள், அதன் பையையும் அதன் எண்ணிக்கையும் அதன் முடிச்சையும் பாதுகாத்து வைத்திரு. அதன் ஒரிமையாளர் வந்தால் அவரிடம் ஒப்படைத்து விடு. இல்லையென்றால் நீயே அதை பயன்படுத்திக் கொள்" என்று கூறினார்கள். எனவே நானே அதை பயன்படுத்திக் கொண்டேன்

No comments:

Post a Comment