Date :10/03/2009
கேள்வி : 10
கேள்வி
ஸூரத்துன்னிசாவை ஒரு ஸஹாபி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஓதி காட்டுகையில் எந்த வசனம் வரும் பொது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கண்கள் கண்ணீரால் நிரம்பியது?
பதில்
ஸுரதுன்னிசாவில் 41 வது வசனம் (4.41)
ஆதாரம்: புகாரி 4582
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார்கள்
(ஒரு முறை ) நபி (ஸல்) அவர்கள் என்னிடம் "எனக்கு (குர்ஆணை) ஓதிக்காட்டினார்கள்" என்று கூறினார்கள். நான் "தங்கள் மீதே குர்ஆனன் அருளப்பட்டு கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிகாட்டுவதா ? " என்று கேட்டேன். அதற்கு அவர்கள் " ஏனெனில் நான் பிறரிடமிருந்து அதை கேட்க விரும்புகிறேன்" என்று கூறினார்கள். எனவே நான் அவர்களுக்கு 'அந்நிஸா ' அத்தியாயத்தை ஓதிகாட்டினேன் "ஒவ்வொரு சமுதாயத்தில்ருந்தும் (அவர்கள் நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும் போதும், (நபியே ) உங்களை எவர்களுக்கு எதிரான சாட்சியாக கொண்டுவரும் போதும் (இவர்களின் நிலை) எப்படி இருக்கும்?" எனும் அத்தியாயத்தை நான் அடைந்தபோது நபி(ஸல்) அவர்கள் நிறுத்துங்கள் என்று கூறினார்கள் .அப்போது அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைச் சொரிந்து கொண்டிருந்தன .
Tuesday, March 10, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment